தேர்தல் பொறுப்பில் இருந்து விலகிய அண்ணாமலை..!
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசியதாவது,
எல்லா மாநிலத்திற்கும் பயனளிக்கும் வகையில் நல்ல பட்ஜெட் கொடுத்துள்ளோம். தமிழ்நாடு அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அண்ணாவின் ஆட்சிக்கும், திமுக ஆட்சிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறதா. அண்ணா என்கிற பசு மாட்டின் மீது நிற்கும் காக்கா தான் இப்போதைய திமுக ஆட்சி அண்ணாவின் குடும்பத்தினர் இன்றைக்கு எப்படி இருக்கிறது என்று யாருக்காவது தெரியுமா. அண்ணாவின் குடும்பம் அரசியல் பக்கமே வருவதே இல்லை.
ஒவ்வொரு திமுக அமைச்சரையும் ஒரு அறையில் சாத்திவிட்டு அண்ணாவை பற்றி 10 கருத்துகள் எழுத சொன்னால் யாருக்கும் எழுதத் தெரியாது.
என் தந்தையின் உடல்நலம் காரணமாக நான் கோவையில் இருக்கிறேன். அவரை கவனித்துக் கொள்ள வேண்டிய கடமை உள்ளது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேனா என தெரியவில்லை. அதற்கு காலம் தான் பதில் சொல்லும். இதன் காரணமாக, தந்தையின் உடல்நிலை சரியில்லாததால் சிங்காநல்லூர், காரைக்குடி உள்ளிட்ட 6 தொகுதிகளின் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பணியில் இருந்து விலகுகிறேன். இதைப்பற்றி எங்கள் தலைவர் நயினார் நாகேந்திரனிடமும் சொல்லியுள்ளேன்.
விஜய்யை நான் தேவையில்லாமல் குற்றம் சொல்ல விரும்பவில்லை. எங்களிடம் டபுள் என்ஜின் இருக்கிறது. விஜய்யிடம் என்ஜினே இல்லை. விஜய்யிடம் வண்டி, பெட்ரோல் டீசல், வண்டியை இயக்க யாரிடமும் இல்லை. 234 தொகுதிகளில் விஜய்யால் வேட்பாளர்களை நியமிக்க முடியுமா?.
இவ்வாறு அவர் கூறினார்.


