தமிழகத்திற்கு மோடி நிறைவேற்றிய திட்டங்கள் என்னென்ன? வெள்ளை அறிக்கை வெளியிட்டார் அண்ணாமலை

 
அண்ணாமலை

திமுகவின் அடையாளமே பொய்களும் மோசடியும்தான் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். 


இதுதொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 9 ஆண்டு ஆட்சியில், தமிழகத்திற்கு போதுமான திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். அவர் கூறியுள்ளது மிகப் பெரிய பொய் என்பதை தமிழக பாஜக சார்பாக வெள்ளை அறிக்கை மூலம் நிரூபிக்க விரும்புகிறோம்.

திமுகவின் அடையாளமே பொய்களும் மோசடியும்தான். மு.க.ஸ்டாலின் அவற்றில் எந்த எல்லைக்கும் செல்வார் என்பது மட்டுமே தெரிகிறது. பிரதமர் மோடி தலைமையின் கீழ், கடந்த 9 ஆண்டுகளில், தமிழகம் ₹10.76 லட்சம் கோடிக்கு மேல் பெற்றுள்ளது.

வெள்ளை அறிக்கை :

தமிழ்ப் பதிப்பு: https://tamilnadu.bjp.org/wp-content/uploads/2023/08/Book-Tamil-1_comprescompressed.pdf

ஆங்கிலப் பதிப்பு: https://tamilnadu.bjp.org/wp-content/uploads/2023/08/Book-English-1.21-MB.pdf

திமுக, காங்கிரஸ் கூட்டணியான ஐமுகூ ஆட்சியில், வரலாறு காணாத ஊழலால் தமிழகம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டதைத் தவிர வேறு என்ன கிடைத்தது?” எனக் குறிப்பிட்டுள்ளார்.