திமுக எம்எல்ஏ பேசிய வீடியோவை வெளியிட்ட அண்ணாமலை!
திருச்சி மருத்துவமனையில் சட்டவிரோத சிறுநீரக அறுவை சிகிச்சை மூலம் கிடைத்த லாபத்தை தனது தந்தையின் ரோல்ஸ் ராய்ஸின் ரூ.14.5 கோடி விலையுடன் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழக பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: கிட்னி திருடியது குறித்து மணச்சநல்லூர் திமுக எம்எல்ஏ கதிரவன் வெட்கமின்றி பெருமை பேசுகிறார். ஒரு வீடியோவில், தனது திருச்சி மருத்துவமனையில் சட்டவிரோத சிறுநீரக அறுவை சிகிச்சை மூலம் கிடைத்த லாபத்தை தனது தந்தையின் ரோல்ஸ் ராய்ஸின் ரூ.14.5 கோடி விலையுடன் ஒப்பிட்டு பேசுகிறார். ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்க திருப்பட்டூரில் மக்களின் ஒட்டுமொத்த கிட்னியையும் திருட வேண்டும் என்கிறார்.
இது நகைச்சுவையல்ல. நாமக்கல்லைச் சேர்ந்த ஏழை நெசவாளர்கள் ஏமாற்றப்பட்டு, அவர்களின் சிறுநீரகங்கள் திருடப்பட்டன. மேலும் இந்த வீடியோவில் தனது மருத்துவமனை இந்த வர்த்தகத்தில் குறைந்தது ரூ.7.5 கோடி சம்பாதித்ததாக எம்எல்ஏவே ஒப்புக்கொள்கிறார். ஆனாலும், திமுக அரசு எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சிறுநீரக திருட்டு மோசடியில் இடைத்தரகரான அவர்களின் செயல்பாட்டாளர் திராவிட ஆனந்தன் கைது செய்யப்பட்டாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
Here is Manachanallur DMK MLA Thiru Kathiravan, boasting without shame.
— K.Annamalai (@annamalai_k) August 13, 2025
In a video, he compares the profit from illegal kidney operations at his Trichy hospital to the ₹14.5 crore price of his father’s Rolls-Royce, admitting he’d need to remove all the kidneys in Thirupattur to… pic.twitter.com/4PqAJYeyEj