திமுக ஃபைல்ஸ் பாகம்-3...மற்றொரு ஆடியோவை வெளியிட்டார் அண்ணாமலை

 
Annamalai

திமுகவின் ஊழல் தொடர்பான ஆடியோ பதிவுகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது மேலும் ஒரு ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார். 

திமுகவில் தற்போது பதவியில் இருக்கும் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் உள்ளிட்டோர் குறித்தான ஊழல் புகார்களை வெளியிடுவேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதன் காரணமாக அவர் தொடர்ந்து பல்வேறு ஆடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது மேலும் ஒரு ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார். 


அண்ணாமலை தனது பதிவில், திமுக எம்பியும், முன்னாள் அமைச்சருமான ஆ.ராஜா (2ஜி வழக்கில் முக்கிய குற்றவாளி) மற்றும் எம்எஸ் ஜாபர் சைட், தமிழக மாநில உளவுத்துறையின் முன்னாள் தலைவர் இடையேயான உரையாடல். ஒரு கட்டத்தில் நிர்வகிக்கப்படும் சிபிஐ சோதனை, அங்கு மோசடியில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ரெய்டு பற்றிய முன்கூட்டியே தகவல்களைப் பெறுகிறார்கள். மிக மோசமான விஷயம் என்னவென்றால், சிபிஐ அதிகாரிகள் வருவதற்கு முன்பே ஆதாரங்கள் வெளியில் அனுப்பப்பட்டன. இதைவிட மோசமான வீடியோ இனிமேல் தான் வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.