தேர்தல் வாக்குறுதி- திமுக வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா?: அண்ணாமலை

 
annamalai stalin

பத்மஸ்ரீ விருது பெற்ற இந்திய கூடைப்பந்து மகளிர் விளையாட்டு அணியின் முன்னாள் கேப்டன் அனிதா பால்ராஜுக்கு தமிழ்நாடு பாஜக சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் அனிதாவுக்கு தமிழக பாஜக சார்பில் கார் வாங்குவதற்காக 10 லட்ச ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டது.

BJP to promote ex-cop Annamalai as its face in TN with a royal welcome- The  New Indian Express

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்ட 500 திட்டங்களில் 200 திட்டங்களை நிறைவேற்றியிருப்பதாக தமிழ்நாடு அரசு கூறுவதை  வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். பொருளாதாரத்தில் கடந்த 7 ஆண்டுகளில் சிறந்த ஆட்சியை பாஜக அளித்து இருக்கிறது. ரூ.41 கோடி தினமும் நஷ்டத்தில் இருந்த ஏர் இந்தியாவை ஆறு ஆண்டுகள் பாஜக நடத்தியது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வாக இருந்தாலும், வருமானத்தை இழந்தாலும் பொதுமக்கள் நலனுக்காக மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது. ஆனால் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்தும் கூட தேர்தல் அறிக்கையில் சொன்னதைபோல் குறைக்காமல் இருக்கும் தமிழ்நாடு அரசை கண்டித்து நவம்பர் 22ஆம் தேதி  பாஜக போராட்டம் நடத்த உள்ளது” எனக் கூறினார்.