சாட்டையால் தன்னைத்தானே அடித்து அண்ணாமலை போராட்டம்!
சாட்டையால் தன்னைத்தானே அடித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஞானசேகர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில், இந்த விவகாரத்தை கண்டித்து இன்று சாட்டையால் அடித்துக் கொள்ளும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அண்ணாமலை அறிவித்தார். திசைமாறிப் போன திமுக அரசின் கவனத்தை ஈர்க்கவும், குற்றவாளிகளை, கட்சி சார்பின்றி குற்றவாளிகளாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று காவல்துறையை வலியுறுத்தியும், எனது இல்லத்தின் முன்பு, சாட்டையால் என்னை நானே அடித்துக் கொள்ளும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.
இந்த நிலையில், சாட்டையால் தன்னைத்தானே அடித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். கோவையில் உள்ள தனது இல்லத்தில் ஏற்கனவே அறிவித்தது போல சாட்டையால் தன்னை தானே அடித்து போராட்டத்தில் ஈடுபட்டார். திமுகவை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை செருப்பு அணிய மாட்டேன் எனவும் சபதம் எடுத்துள்ளார்.