“ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஈபிஎஸ்க்கு பதிலளிக்கிறேன்..”- அண்ணாமலை ட்விஸ்ட்
Jul 14, 2025, 16:30 IST1752490845000
ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து செய்தியாளர்களை சந்திப்பேன் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவை காந்திபுரம் பகுதியில் தனியார் நிறுவனம் திறப்பு விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அப்போது அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என்ற எடப்பாடி பழனிசாமியின் கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளிக்க அண்ணாமலை மறுப்பு தெரிவித்து விட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை அனைத்தும் செட்டில் டவுன் ஆகட்டும் என காத்திருப்பதாகவும் அதன் பிறகு ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் இருந்து எப்போது போன்று தொடர்ந்து செய்தியாளர்களை சந்திப்பேன் எனவும் அண்ணாமலை பதில் அளித்து புறப்பட்டு சென்றார்..


