“அதிமுக எங்களுக்கு எதிரி கட்சி இல்லை”- அண்ணாமலை
Updated: Mar 4, 2025, 18:37 IST1741093667637

அதிமுக எங்களுக்கு எதிரி கட்சி இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “திமுகவை வீட்டுக்கு அனுப்புவதே ஒரே நோக்கம். அனைவருடைய நோக்கமும் 2026-ல் திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பது தான். திமுக மீது மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள்.தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலம் இருக்கிறது. பாஜக கட்சியை வளர்க்கும் பணியில் உள்ளது. NDA கூட்டணி வலிமை அடைந்து வருகிறது. அமமுக ஏற்கனவே எங்களுடன் இருக்கிறது. மேலும் தேர்தல் நேரத்தில் யார் இருப்பார்கள். அதிமுக எங்களுக்கு எதிரி கட்சி இல்லை. நாங்கள் எல்லாருடையும் நட்பாகவே பழகுகிறோம். கல்விக்கு மத்திய அரசு பணம் தரவில்லை என கனிமொழி அக்கா சொல்லுவது சரியில்லை.” என்றார்.