நான் பெற்ற வாக்குகள் அனைத்தும் பணம் கொடுக்காமல் பெற்ற வாக்குகள்- அண்ணாமலை

 
annamalai

2026 இல் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க போகிறோம் என அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.

Image


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்திருக்கிறது, அதில் எந்த மாற்றமும் இல்லை. தமிழ்நாட்டிலிருந்து NDA கூட்டணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களை  அனுப்பி வைக்க வேண்டும் என்ற இலக்கு இருந்தது. அதை அடைய முடியவில்லை என்பது வருத்தம். பாஜக இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என மக்கள் சொல்கிறார்கள். மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம். எங்களின் இலக்கு பெரியது அதற்காக தான் வேலை செய்கிறோம். முதன்முதலாக திராவிட கட்சிகள் கூட்டணியில் இல்லாமல் தனித்து நின்று பெரிய அளவில் வாக்குப் பெற்றுள்ளோம். 2026ல் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதே பாஜகவின் இலக்கு. 

கோவையில் நான் பெற்ற வாக்குகள் அனைத்தும் பணம் கொடுக்காமல் பெற்ற வாக்குகள். பணம் கொடுக்காமல் நேர்மையாக தேர்தலை சந்தித்த நாம் தமிழர் கட்சியை பாராட்டுகிறேன். 2026 இல் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க போகிறோம். 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பது தான் எங்களது அடுத்த இலக்கு. ஒடிசாவில் தமிழர்களை அவமதிப்பது போன்ற வீடியோவை வெளியிட்டது பாஜக அல்ல.  வி.கே.பாண்டியன் அரசியலுக்கு வந்த பின் பிஜூ ஜனதா தளத்தை ஒடிசா மக்கள் தோற்கடித்துள்ளனர். நாம் தமிழர் கட்சி நேர்மையாக பணம் கொடுக்காமல் சுயேட்சை சின்னத்தில் நின்று வாக்குகளை பெற்றுள்ளனர். கூட்டணியின்றி தனித்து நின்ற நாம் தமிழர் கட்சியை நான் பாராட்டுகிறேன்.” என்றார்.