ஜெயலலிதாவை ஒரு சிறந்த இந்துத்துவவாதி என நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது?- அண்ணாமலை

 
அண்ணாமலை

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அம்மையார் செல்வி ஜெயலலிதா அவர்களை ஒரு சிறந்த இந்துத்துவவாதி என்று நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “மீண்டும் சொல்கிறேன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தீவிரமான இந்துத்துவவாதி. அதிமுகவினருக்கு சந்தேகம் இருந்தால், இந்துத்துவவாதி பற்றி 1995ல் உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.எஸ்.வர்மா அளித்த தீர்ப்பை பதிவிறக்கம் செய்து படியுங்கள். அதில், இந்துத்துவா என்பது மதம் சார்ந்தது கிடையாது, அது வாழ்வியல் முறை. இம்மண்ணின் கலாசாரம், 20 ஆண்டுகளாக வாழ்ந்திருக்ககூடிய வாழ்க்கையை பிரதிபலிப்பது தான் இந்துத்துவா. அனைவரையும் அரவணைப்பதுதான் இந்துத்துவா. 


1984 ஆம் ஆண்டு ஜெயலலிதா எம்.பியாக இருந்தபோதும், முதல்வராக இருந்தபோதும் ஆதரித்து பேசிய பல விஷயங்களை, இன்றைய அதிமுக எதிர்த்து வருகிறது. அயோத்தியில் ராமர் கோவிலை ஆதரித்த முதல் அரசியல்வாதி ஜெயலலிதா” என்றார்.