500 ரூபாய் நோட்டுகளும் சில ஆண்டுகளில் திரும்பப் பெறப்படலாம் - அண்ணாமலை

 
annamalai

500 ரூபாய் நோட்டுகளும் சில ஆண்டுகளில் திரும்பப் பெறப்படலாம்  என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

annamalai mkstalin

2 ஆயிரம் ரூபாயை ரிசர்வ் வங்கி திரும்ப பெறுவதாக அறிவித்துள்ள நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “500 சந்தேகங்கள், 1000 மர்மங்கள், 2000 பிழைகள், கர்நாடகப் படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்!”என்று விமர்சித்திருந்தார். 

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “2024 தேர்தலுக்கு கொடுப்பதற்காக முதலமைச்சர் மூட்டை மூட்டையாக 2000 ரூபாய் நோட்டுகளை கட்டி வைத்துள்ளார்.அவற்றை திடீரென எங்கே சென்று கொடுப்பார். அதனால் 2000 ரூபாய் நோட்டை தடை செய்தவுடன் கோபப்படுகிறார். முதலமைச்சர் கோபப்படுவது ரசிக்கும்படி உள்ளது. நமது நோக்கமே க்ளீன் அரசு, க்ளீன் அரசியல், அதன்படி, க்ளீன் நோட் பாலிசி என்ற அடிப்படையில் ரிசர்வ் வங்கி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றுள்ளது.  செப்டம்பர் வரை நேரம் இருக்கிறது. ஆகவே 2000 ரூபாயை வங்கியில் கொடுத்துவிட்டு மாற்றிக் கொள்ளலாம். 2,000 ரூபாய் நோட்டை தடை செய்வதால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. விரைவில் 500 ரூபாய் நோட்டுகளும் சில ஆண்டுகளில் திரும்பப் பெறப்படலாம

சுப்ரீம் கோர்ட் செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய சொல்லி இருக்கிறார்கள். அரசியல் அமைப்பு சட்டப்படி ஆளுநர் முதல்வரிடம் செந்தில் பாலாஜி யை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட முடியும்” எனக் கூறியுள்ளார்.