முதுகில் நிறைய இடம் இருக்கிறது குத்துங்கள்- அண்ணாமலை

 
annamalai

முதலமைச்சர் ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும், தமிழக அரசியலில் ஜாதியையும், மதத்தையும் கலந்த பெருமையை திமுக தலைமையையே சேரும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Annamalai

மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “முதலமைச்சருக்கு எதைப் பார்த்தாலும் பயமாக இருக்கிறது. அதற்கு அண்ணாமலை ஒன்றும் செய்ய முடியாது, சினிமாவில் துணை நடிகர்கள், நடிகர்களை பெரியவர் திறமைசாலி என்று புகழ்வது போல திமுகவின் மேடைகளில் நான்கு நடிகர்களை வைத்துக்கொண்டு முதலமைச்சர் திறமைசாலி, வல்லவர் என்று பேசுவதால் பாஜக பயப்படாது. முதலமைச்சர் ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும், தமிழக அரசியலில் ஜாதியையும், மதத்தையும் கலந்த பெருமையை திமுக தலைமையையே சேரும்.

இந்தியாவில்  இருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்களை அழைத்து வந்து ஸ்டாலினை புகழ்ந்து பேசுவதனால் பாஜக ஒருபோதும் பயப்படாது. இதை தமிழக மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். பயமோ, யாரின் காலில் விழுவதோ என்னிடம் இருக்காது. என்னுடைய முடிவுகளில் பாரபட்சமும் இருக்காது. தலைவர்கள் முடிவெடுப்பதில் நான்கு பேர் கோபித்து கொண்டு வெளியே போக தான் செய்வார்கள். இதே போல் திமுகவிலோ, அதிமுகவிலோ நிறைய நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. கட்சி வளர்ச்சிக்கு எந்த முடிவு எடுக்க வேண்டுமோ அதை நான் துணிந்து எடுத்துக் கொண்டே இருப்பேன். முதுகில் நிறைய இடம் இருக்கிறது, குத்துங்கள். என்னைப் போல தாக்கப்பட்ட தலைவன், தமிழ்நாடு சரித்திரத்தில் யாரும் இல்லை” என்றார்.