சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என கூற முதலமைச்சருக்கு அதிகாரம் இல்லை - அண்ணாமலை

 
Annamalai

தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்த சட்டத்தை அனுமதிக்க மாட்டேன் என்று கூற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிகாரம் இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. இந்த நிலையில், தேர்தல் வருவதை முன்னிட்டு அரசியல் ஆதாயத்திற்காக மத்திய பாஜக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனிடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது குறித்தும், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய அண்ணாமலை, குடியுரிமை என்பது பிறப்பு மற்றும் வழித்தோன்றல் ஆகிய 2 தேவைகளை பூர்த்தி செய்யும். 

annamalai mkstalin

தமிழ்நாட்டில் வழக்கம் போல அரசியல் கட்சிகள் குடியுரிமை திருத்த சட்டம் பற்றி தெரியாமல் பேசுகிறார்கள். குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு ஒரு சதவீதம் கூட பாதிப்பு  ஏற்படாது. இஸ்லாமியர்களின் குடியுரிமையை பறிப்பதற்கான சட்டமும் இது இல்லை. குடியுரிமை திருத்த சட்டம் யாருக்கும் எதிரானது அல்ல.  தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்த சட்டத்தை அனுமதிக்க மாட்டேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.  அவருக்கு அந்த அதிகாரம் இல்லை என கூறினார்.