அமைச்சர் உதயநிதியின் தலைக்கு விலை வைத்தவர் போலி சாமியார் - அண்ணாமலை பேட்டி

 
அண்ணாமலை

அமைச்சர் உதயநிதியின் தலைக்கு விலை வைத்தவர் போலி சாமியாராக இருப்பார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.  

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிலவற்றை  ஒழிக்க வேண்டும்,   எதிர்க்க முடியாது. டெங்கு, மலேரியாவை போன்று சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என கூறினார்.   இந்த கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அயோத்தி சாமியார் ஒருவர் அமைச்சர் உதயநிதி தலைக்கு 10 கோடி ரூபாய் என அறிவித்தார். இதேபோல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் சனாதனத்தை பற்றி தொடர்ந்து பேசுவேன் என உதயநிதி ஸ்டாலின் கூறி வருகிறார்.

உதயநிதி ஸ்டாலின்

இந்த நிலையில், அமைச்சர் உதயநிதியின் தலைக்கு விலை வைத்தவர் போலி சாமியாராக இருப்பார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்கள் சந்தித்த அவர், அமைச்சர் உதயநிதி தலைக்கு விலை வைத்தது பெரிய தவறு. அப்படி வைப்பவர்கள் போலி சாமியார்களாக இருப்பார்கள்.  அப்படி விலை வைத்தவர்கள் சனாதனத்தை பின்பற்றாதவர்களாக இருப்பார்கள். உதயநிதி அரசியலுக்கு வந்த பிறகு பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி மிகவும் அதிகம். குடும்ப அரசியல் என்று நாங்கள் சொல்வது ஒவ்வொரு நாளும் உண்மை என நிரூபணம் ஆகி வருகிறது. இவ்வாறு கூறினார்.