அண்ணாமலை வேண்டும்! அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம்! பரபரப்பு போஸ்டர்
அதிமுக கூட்டணி வேண்டாம், பாஜக மாநில தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும் என தஞ்சையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

அண்மையில் அ.இ.அ.திமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இதனையடுத்து, வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க, பாஜக கூட்டணி அமைய உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கான முயற்சியில் இரு கட்சி தலைமைகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதவிக்காலம் முடிவடையும் நிலையில் பாஜகவுக்கு புதிய மாநில தலைவரை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் அதிமுக- பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்தும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதே போல் தஞ்சை மாவட்டம் முழுவதும் அதிமுக கூட்டணி வேண்டாம், அண்ணாமலையை தமிழக பாஜக தலைவராக நீட்டிக்க வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


