அண்ணாமலை, நயினார் போட்டியிட முடியாது!

 
SA

பாஜக மாநிலத் தலைவர் தேர்தலில் போட்டியிட தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவராகும் வாய்ப்பு குறைந்துள்ளது.


பாஜக மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட கட்சியில் 10 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற விதியால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் இருவரும் பாஜகவில் உறுப்பினராகி 10 ஆண்டுகள் நிறைவடையவில்லை. அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து 8 ஆண்டுகள் மட்டுமே ஆகும் நிலையில், நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவர் பதவிக்கு போட்டியிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

தலைவர் போட்டியில் இருப்பதாக கூறப்படும் அண்ணாமலை மற்றும், நயினார் நாகேந்திரன் இருவருக்குமே தலைவராகும் வாய்ப்பு குறைவு என்றே தெரிகிறது.