திரைத்துறையின் ஒரு பல்கலைக்கழகம் மறைந்துவிட்டது - அண்ணாமலை இரங்கல்

 
annamalai

இயக்குநர் பாரதிராஜா மறைவிற்கு அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பதிவிட்ட அவர், “இயக்குநர் இமயம், ஐயா திரு. பாரதிராஜா அவர்கள் உடல்நலக்குறைவால் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. திரைப்படங்கள் என்பவை யதார்த்தத்தை மீறிய மாய உலகம் என்பதை மாற்றி, மண் சார்ந்த, இயல்பான வாழ்வியலாக மாற்றியவர்களில், ஐயா பாரதிராஜா அவர்கள் ஒரு பல்கலைக்கழகமாகத் திகழ்ந்தவர். வாழையடி வாழையாக அவரது வழி வந்த இயக்குநர்களும், திரைக்கலைஞர்களுமே அதற்குச் சாட்சி. மண்ணின் மீதும், மக்களின் மீதும் பேரன்பு கொண்டிருந்த ஐயா திரு. பாரதிராஜா அவர்களுக்கு, எனது கண்ணீரஞ்சலியைக் காணிக்கையாக்கிக் கொள்கிறேன். ஓம் சாந்தி” என தெரிவித்துள்ளார்.