பிரதமரை சந்திக்கிறார் அண்ணாமலை?
பிரதமர் நரேந்திர மோடியை அண்ணாமலை சற்றுநேரத்தில் சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது IPS பதவியை ராஜினாமா செய்துவிட்டு 2020-ல் பாஜகவில் இணைந்தார் அண்ணாமலை. தமிழ்நாடு பாஜக தலைவராக 2021, ஜூலையில் நியமிக்கப்பட்டார். 2021 சட்டமன்றத் தேர்தலில், அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் ஆர்.இளங்கோவிடம் தோல்வியடைந்தார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரிடம் தோல்வியடைந்தார். 2025, ஏப்ரலில் அண்ணாமலையின் மாநில பாஜக தலைவர் பொறுப்பு நயினார் நாகேந்திரனுக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து 2026, ஜூன் 2ல் பாஜகவிலிருந்து விலகினார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை அண்ணாமலை சற்றுநேரத்தில் சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்ணாமலை பிரதமரை சந்தித்த பின்னர் தனிக்கட்சி அமைப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

