அரசியலில் பரபரப்பு திருப்பம்- அன்புமணி உடன் அண்ணாமலை சந்திப்பு

 
s

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாமக தலைவர் அன்புமணி ராமதாசை அண்ணாமலை சந்தித்து பேசினார்.

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை 'வி தி லீடர்ஸ்' என்ற இயக்கத்தை தொடங்கி உள்ளார். விரைவில் இந்த இயக்கம் அரசியல் கட்சியாக மாற உள்ளது. ஆரம்பிக்கப்பட்ட 73 நாட்களில் 20 லட்சம் பேர் வீ தி லீடர்ஸ் அமைப்பில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். 50 லட்சம் பேர் இணைந்தவுடன் இதை அரசியல் இயக்கமாக மாற்ற போகிறோம் என அண்ணாமலை கூறிவருகிறார். 

இந்நிலையில்  சென்னையில் இந்தியா டுடே தொலைக்காட்சி சார்பில் நடைபெற்ற “காவிரி நீர் - மேகதாது” தொடர்பான கருத்தரங்கில் பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் MP மற்றும் “We The Leaders” அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்றனர். மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழகத்தின் காவிரி நீர் உரிமை குறித்து தற்போது தீவிரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.