ஸ்ரீ மகாவதர் பாபாஜியின் குகையில் அண்ணாமலை தியானம்

ஸ்ரீ மகாவதர் பாபாஜியின் குகையில் முன்னாள் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தியானம் செய்யும் புகைப்படம் வைரலாகிவருகிறது.
தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை கடந்த 2 நாட்களுக்கு முன்னர் மாற்றப்பட்டார். அதிமுக கூட்டணி நிர்பந்தம் காரணமாக அண்ணாமலை மாற்றப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து தமிழக பாஜக தலைவராக, பாஜக சட்டமன்ற குழு தலைவரான நயினார் நாகேந்திரன் நியமனம் செய்யப்பட்டார். இதனையடுத்து அண்ணாமலை தனது பொறுப்புகளை நயினார் நாகேந்திரனிடம் ஒப்படைத்தார். இதனிடையே பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை ஆன்மீக பயணமாக இமயமலை சென்றுள்ளார். தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டதை அடுத்து அவர் டெல்லி புறப்பட்டு சென்றார். இந்த நிலையில், அண்ணாமலை இமயமலைக்கு சென்றுள்ளார். ஆன்மீக பயணமாக அண்ணாமலை இமயமலை சென்றுள்ளார்.
ஆன்மீக பயணமாக இமயமலை சென்றுள்ள பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, ஸ்ரீ ஸ்ரீ மஹாவதார் பாபாஜி குகையில் தியானம் செய்தார். இதுதொடர்பான புகைப்படம் வைரலாகிவருகிறது.