மாநில தலைவராக மீண்டும் அண்ணாமலையே தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வாய்ப்பு..?

பாஜகவில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாகிகள் புதிதாக தேர்வு செய்யப்படுவர். 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை உறுப்பினர் சேர்க்கை புதுப்பிக்கப்படும். இதுதவிர, புதிய உறுப்பினர் சேர்க்கையும் நடக்கும். அந்த வகையில், தமிழக பாஜகவில் கடந்த செப்டம்பர் மாதம் உறுப்பினர் சேர்க்கை பணிகள் தொடங்கப்பட்டன. இதையடுத்து, உட்கட்சித் தேர்தல் தொடங்கின. அதில், கிளை தலைவர், மண்டல் தலைவர், மாவட்ட தலைவர் என பல்வேறு பதவிகளுக்கு வாக்குப்பதிவு அடிப்படையில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
அதன்படி, தமிழக பாஜகவில் உள்ள 68 ஆயிரம் கிளைகளில் 47 ஆயிரம் கிளைகளுக்கும், 1,231 ஒன்றியத்தில் 950 ஒன்றியங்களுக்கும் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழக பாஜகவில் உள்ள 67 மாவட்டங்களில் 33 மாவட்டங்களுக்கு தற்போது அமைப்பு தேர்தல் மூலம் மாவட்ட தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மாநில தேர்தல் அதிகாரியும், மாநில துணை தலைவருமான எம்.சக்கரவர்த்தி வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
அமைப்பு தேர்தல் மூலம் கன்னியாகுமரி கிழக்கு - கே.கோபகுமார், கன்னியாகுமரி மேற்கு - ஆர்.டி.சுரேஷ், தூத்துக்குடி வடக்கு - கே.சரவண கிருஷ்ணன், திருநெல்வேலி வடக்கு - ஏ.முத்து பழவேசம், திருநெல்வேலி தெற்கு - எஸ்.பி.தமிழ்ச்செல்வன், தென்காசி - ஆனந்தன் அய்யாசாமி, விருதுநகர் கிழக்கு - ஜி.பாண்டுரங்கன், சிவகங்கை - டி.பாண்டிதுரை, மதுரை கிழக்கு - ஏ.பி.ராஜசிம்மன், மதுரை மேற்கு - கே.சிவலிங்கம், திண்டுக்கல் கிழக்கு - டி.முத்துராமலிங்கம், தேனி - பி.ராஜபாண்டி, திருச்சி நகர் - கே.ஒண்டிமுத்து, திருச்சி புறநகர் - ஆர்.அஞ்சாநெஞ்சன், புதுக்கோட்டை கிழக்கு - சி.ஜெகதீசன், அரியலூர் - ஏ.பரமேஸ்வரி, தஞ்சாவூர் வடக்கு - தங்க கென்னடி, திருவாரூர் - வி.கே.செல்வம், மயிலாடுதுறை - நாஞ்சில் ஆர்.பாலு, கடலூர் கிழக்கு - அக்னி கிருஷ்ணமூர்த்தி, கடலூர் மேற்கு - கே.தமிழழகன், செங்கல்பட்டு தெற்கு - எம்.பிரவீன் குமார், செங்கல்பட்டு வடக்கு - என்.ரகுராமன், காஞ்சிபுரம் - தாமரை ஜெகதீசன், திருவள்ளூர் கிழக்கு - எஸ்.சுந்தரம், கள்ளக்குறிச்சி- எம்.பாலசுந்தரம், வேலூர் - வி.தசரதன், திருப்பத்தூர் - எம்.தண்டாயுதபாணி, சேலம் நகர் - டி.வி.சசிகுமார், நாமக்கல் கிழக்கு - கே.பி.சரவணன், நாமக்கல் மேற்கு - எம்.ராஜேஷ் குமார், கோவை தெற்கு - ஆர்.சந்திரசேகர், நீலகிரி - ஏ.தர்மன் ஆகியோர் மாவட்ட தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட தலைவர் நியமனத்தை தொடர்ந்து, மாநில தலைவர், தேசிய தலைவர் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள மாவட்ட தலைவர்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் எனவும், அதனால், மாநில தலைவராக மீண்டும் அண்ணாமலையே தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.