2,000 நோட்டு திரும்ப பெறப்படுவதை கண்காணியுங்கள்! நிர்மலாவுக்கு அண்ணாமலை கடிதம்

 
Annamalai

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறப்படுவதை கண்காணியுமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலாவுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். 

Annamalai meeting with Nirmala Sitharaman | நிர்மலா சீதாராமன் உடன் அண்ணாமலை  சந்திப்பு | Dinamalar

ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கிகள் ரூ. 2000 நோட்டுகள் விநியோகத்தை நிறுத்த உத்தரவிட்டுள்ள ரிசர்வ் வங்கி புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டாலும் வருகிற செப்டம்பர் 30-ம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் செல்லும் என்று கூறியுள்ளது.  மே 23ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் ரிசர்வ் வங்கி கிளைகளில் ரூபாய் 20 ஆயிரம் வரை ரூபாய் 2000 நோட்டுக்களை பொதுமக்கள் மாற்றிக் கொள்ளலாம். நாள் ஒன்றுக்கு 20,000 வரை மட்டுமே 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். அதில், முறைகேடாக சம்பாதித்த ரூ.2,000 நோட்டுகளை திமுகவினர் கூட்டுறவு வங்கிகள், டாஸ்மாக்கில் மாற்ற வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ரூ.2,000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதை வங்கிகள் கண்காணிக்க மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.