கடற்கரை தூய்மை இயக்கத்தை துவக்கினார் அண்ணாமலை..!!
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகி, 'வீ தி லீடர்ஸ்' அமைப்பை தொடங்கி, பல்வேறு சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
இந்த மாதம் முழுதும், போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை, 'வீ தி லீடர்ஸ்' அமைப்பு நடத்தியது. ஆகஸ்ட் மாதம், சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த அண்ணாமலை திட்டமிட்டுள்ளார்.
இந்த மாதம் முழுவதும் தமிழகம் முழுவதும், ஏரி, கால்வாய் சுத்தப்படுத்துதல், மரம் நடுதல் போன்ற பணிகள் நடைபெற உள்ளன.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 02) கன்னியாகுமரி கடற்கரைச் சாலை காட்சிக் கோபுரம் பகுதியில் தூய்மைப் பணியை அண்ணாமலை மேற்கொண்டார்.அவருடன் வீ தி லீடர்ஸ் அமைப்பினரும் உடன் தூய்மை பணியை செய்தனர். கடற்கரையில் கூடிய அவரது ஆதரவாளர்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.
உவரி மற்றும் குலசேகரன்பட்டினம் கடற்கரைக்கு சென்று அண்ணாமலை ஆதரவாளருடன் தூய்மை பணியை செய்ய இருக்கிறார்.

