அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை விளாசிய அண்ணாமலை..!!
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கு ஆதரவாக அமைச்சர் ஆதவ் கருத்து தெரிவித்த வீடியோவை வெளியிட்டு தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்தார்.
இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக வெற்றிக்கழகத்தின் அமைச்சர் ஆதவ் பிரபலமான தமிழ் நகைச்சுவையை மீண்டும் அரங்கேற்றியுள்ளார்.
ஏணி சின்னத்துல ஒரு குத்து, தென்னமர சின்னத்துல ஒரு குத்து. ஒருபுறம் ஆதவ் தான் தற்போது எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதை மறந்துவிட்டதைப் போலத் தோன்றியது. ஆதவைப் போல, திமுக தொண்டர்கள் கூட உதயநிதியை பாதுகாக்க இந்த அளவிற்குச் செல்லவில்லை.
வட இந்தியாவில் சனாதன தர்மம் எப்படி ஹிந்து மதத்தின் அடையாளமாக இருக்கிறது தமிழகத்தில் சனாதன தர்மம் குறித்து விவாதம் வந்தவுடன், அது எப்படி சமத்துவமின்மை என்று மறுவரையறை செய்யப்படுகிறது?மிகவும் குழப்பமாக இருக்கிறது சகோ; திமுக எம்எல்ஏ உதயநிதி தெரிவித்த மிகவும் பொறுப்பற்ற கருத்துக்களுக்கு வருத்தம் தெரிவிப்பதற்குப் பதிலாக, ஆதவ் அவற்றை நியாயப்படுத்தி பேசியுள்ளார்.
இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

