ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு அதிமுக கட்சி எங்கே இருக்க போகிறது என்பது தெரியும் - அண்ணாமலை..!

 
1

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிவகங்கையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒரு விஷயத்தை எல்லாரும் புரிஞ்சுக்க வேண்டும். அந்த பாறை, அங்கு இருக்க கூடிய விவேகானந்தர் மண்டபம் என்பது, முழுவதுமாக விவேகானந்த கேந்திரா. அது ஒரு தனியார் அமைப்புக்கு சார்ந்தது. பெரிய போராட்டத்திற்கு பிறகு அந்த விவேகானந்தர் பாறைக்கு மேலே விவேகானந்தர் தியான மண்டபம் கட்டப்பட்டது. இது ஒரு தனியார் நிகழ்வாக, அங்கு இருக்கக்கூடிய தனியார் அமைப்புகள் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி அங்கு சென்று இருக்கிறார். இதனால் தான் இங்க பாஜக தொண்டர்கள் கூட அங்கு செல்லவில்லை. தனி நிகழ்வாக, அவருடைய சொந்த நிகழ்வாக அங்கு சென்றிருக்கிறார். இதற்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதனால் தான் தான் அரசும் கூட எங்களுடைய அனுமதி பெற தேவையில்லை என்று சொல்லிவிட்டது.

தேர்தல் பிரசாரம் முடியும் நாளில் கூட இங்கு இரு பெரும் தலைவர்கள் தமிழ் மண்ணில் இருக்கின்றார்கள். தேர்தல் தொடங்கியதும் தமிழகத்தில் தான். தமிழகத்தில் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணியின் பங்கு என்பது அதிகமாக இருக்கும் என்று நம்புகிறோம். ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு அதிமுக கட்சி எங்கே இருக்க போகிறது என்பது தெரியும். ஜூன் 4 ஆம் தேதியில் தெரியும். பாஜக எத்தனை இடத்தில் ஜெயிக்க போகிறது என்று.. அதிமுக எத்தனை இடத்தில் ஜெயிக்க போகிறது என்று. இதனால் எப்போதும் எல்லாருக்கும் தெரியும், அணைய போகும் விளக்கு தான் பிரகாசமாக எரியும் என்று.. அதனால் விமர்சனங்கள் ஏன் கடுமையாக இருக்கிறது என்றால், அந்த விளக்கு அணைய போகிறது என்று தான் அர்த்தம். ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு நீங்கள் எங்கே இருக்க போறீங்க.. நான் எங்கே இருக்க போகிறேன் என்பது தெரியும்.

எந்த கட்சி தமிழகத்தில் மக்கள் மனதை பிடித்திருக்கிறது. எந்த கட்சி தமிழகத்தில் வளர்ந்திருக்கிறது. எந்த கட்சியின் வளர்ச்சி மிக அதிகமாக இருக்கிறது என்று பார்க்கத்தான் போகிறோம். எங்களுடைய கடமையை செய்திருக்கிறோம். மக்கள் எங்களுக்கு ஆதரவு அளித்தார்கள் என்று நம்புகிறோம். நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்று நம்புகிறோம். ஜூன் 4 ஆம் தேதி பார்ப்போம். எங்களுடைய வெற்றி என்பது தனிப்பட்ட மனிதனுடைய வெற்றி கிடையாது. தமிழகத்திற்கு உழைக்க வேண்டும். தமிழகத்திற்கு தங்கள் பங்களிப்பு இருக்கனும். தமிழக எம்பிக்கள் அதிகமாக இருந்தால் பணி விரைவாக நடக்கும் என்பதற்காக தான் இந்த வெற்றி. இவ்வாறு அவர் கூறினார்.