உலகத்திலே ஒரு மகா பொய்யன்னா அண்ணாமலை தான் : ஜெயக்குமார்..!

 
1

 முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துக் கூறியதாவது:- அண்ணாமலை போல் பொய் பொய் சொல்வதற்கு ஆஸ்கர் அவார்ட் கொடுக்கலாம். மேலும் உலகத்திலே ஒரு மகா பொய்யன் அப்படின்னா அண்ணாமலை தான் சொல்லணும் கொஞ்சம் கூட கூச்சம் ஆச்சும் இல்லாமல் பொய் சொல்றார். அவருக்கு கண்டிப்பாக தெரியும் தேர்தலில் படுதோல்வி என்பது தெரியும் தெரிந்துகொண்டு ஒரு லட்சம் ஓட்டு காணவில்லை கூறுகிறார். ஒரு லட்சம் ஓட்டு காணவில்லை அண்ணாமலைக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் எல்லார் விரல்களிலும் ஓட்டு போட்ட மை இருக்கிறது. இது நம்ப முடிகிறதா என கேள்வி எழுப்பினர்.

இந்த தேர்தலை பொருத்தவரை தேர்தல் ஆணையம் சொதப்பிவிட்டது. தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி இஸ்லாமியர்களை வெறுப்பு பேச்சு பேசும் பொழுது மக்களை பிளவு படுத்தி ஆளுவது பிரிட்டிஷ்காரர்களின் செயல், அதே வேலையை தற்பொழுது மோடி செய்கிறாரா ? இந்திய அரசின் சட்டத்திலேயே அனைவருக்கும் எல்லாம் உண்டு என உள்ளது, இந்து முஸ்லிம் என அனைத்து தரப்புருமே வரி செலுத்தும் பொழுது இஸ்லாமியர்கள் மட்டும் வரி செலுத்தவில்லையா? மதத்தை பிளவுபடுத்தி அதன் அதன் மூலம் ஆதாயம் பெறலாம் என தேர்தலின் போது பேசுவது சரியில்ல என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு அவர் கூறினார். உடன் முன்னாள் அமைச்சர் வி சோமசுந்தரம் , முன்னாள் எம்எல்ஏ வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.