திமுக பைல்ஸ்-3 ஆடியோ - ஜாபர் சேட் உடன் ஆ.ராசா பேசும் ஆடியோவை ரிலீஸ் செய்த அண்ணாமலை

 
tn

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா முன்னாள் உளவுத்துறை உயர் அதிகாரி ஜாபர் சேட் ஆகியோர் தொலைபேசி உரையாடலை வெளியிட்டுள்ளார் அண்ணாமலை.

Annamalai

DMK Files என்ற தலைப்பில் திமுக முக்கிய பிரமுகர்களின் சொத்துப் பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தன்று வெளியிட்டார். திமுக அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் உள்ளிட்டோரின் சொத்துப் பட்டியலை அண்ணாமலை வெளியிட்டார். ஜூலை மாதம் திமுக பைல்ஸ் ௨ வெளியிட்டார். அதில், அரசு துறைகளில் ஒப்பந்த பணிகளில் நடந்திருந்த முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் இடம் பெற்றிருந்தன.


இந்நிலையில் 2ஜி வழக்கின் போது சிபிஐ விசாரணையை திமுக எப்படி கையாண்டது என்பது குறித்த ஆடியோ ஒன்றை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.  அதில் முன்னாள் மத்திய அமைச்சர் .  ராசாவுடன் தமிழக உளவுத்துறை முன்னாள் உயர் அதிகாரி ஜாபர் சேட் உரையாடும் ஆடியோ இடம் பெற்றுள்ளது. முன்னதாக திமுக எம்பி டி.ஆர்.பாலு, முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட் இடையிலான தொலைபேசி உரையாடல்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.