"திமுக பட்டத்து இளவரசர் மனதைக் குளிர வைக்க பேசி வருகிறார் ஆர்.எஸ். பாரதி" - அண்ணாமலை

 
tt

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் தன்னை தொடர்புப்படுத்தி பேசிய ஆர்.எஸ்.பாரதி மீது அண்ணாமலை வழக்கு தொடர்ந்துள்ளார். 

K Annamalai

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில், திமுக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேடை மறைக்கவும், திமுக பட்டத்து இளவரசர் மனதைக் குளிர வைக்கவும், அனைவரையும் அவதூறாகப் பேசி வரும், அறிவாலயத்தின் திரு. ஆர்.எஸ். பாரதி மீது, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளோம். திரு. ஆர்.எஸ்.பாரதி அவர்கள் பரப்பிய அவதூறுக்கு தகுந்த தண்டனையும் ரூபாய் ஒரு கோடி இழப்பீடும் கோரித் தொடர்ந்துள்ள இந்த வழக்கின் மூலம் கிடைக்கும் நிதி, கள்ளக்குறிச்சியில் போதைப் பொருள்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையம் அமைத்துப் பராமரிக்கப் பயன்படுத்தப்பட உள்ளது என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.