பாஜகவில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு...! தலைமை அறிவிப்பு

பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அண்ணாமலைக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
அண்ணாமலையின் பங்களிப்பு முக்கியமானது, கட்சியின் தேசிய கட்டமைப்பில் அண்ணாமலையின் திறன்களை பாஜக பயன்படுத்தும் என்று அமித் ஷா அறிவித்திருந்த நிலையில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாஜக தலைவராக கடந்த நான்கு வருடங்களாக அண்ணாமலை பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில் தமிழக பாஜக மாநில தலைவருக்கு போட்டி அறிவிக்கப்பட்டது. இந்த பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டும் வேட்பு மனு செய்து இருந்ததால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். சென்னை வானகரத்தில் ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் அதிகாரப்பூர்வமாக நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து பாஜகவில் அண்ணமாலைக்கு புதிய பொறுப்பு வழங்கி அறிவிப்பு வெளியாகி உள்ளது. அண்ணாமலைக்கு தேசிய பொதுக்குழுவில் உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழிசை, சரத்குமார், தமிழிசை, எச்.ராஜா, ராம சீனிவாசன், கரு.நாகராஜன் ஆகியோரும் பொதுக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் எல்.முருகன், வானதி சீனிவாசன், கே.பி.ராமலிங்கம் ஆகியோரும் பொதுக்குழு உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.