"தமிழக மக்களை பிடித்த பீடைகள்..." - ஜெயக்குமாரை விளாசிய அண்ணாமலை

 
tt

மாவீரன் அழகுமுத்துக்கோன்  குருபூஜை விழாவில் கலந்துகொண்ட தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  மாவீரர் அழகுமுத்துக்கோனின் வாழ்க்கை வரலாறு தமிழக பாட புத்தகத்தில் இடம் பெற வேண்டும்.  31 ஆண்டுகள் மட்டுமே பூமியில் வாழ்ந்திருந்த  மாபெரும் வீரர் ஆவார் என்றார்.

Annamalai

 தொடர்ந்து பேசிய அவர், பல பேய்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன.  தமிழக மக்களை பிடித்த பீடைகள் அவர்கள்.  70 ஆண்டுகளாக வளர்ச்சி இல்லாததற்கு காரணமே இந்த பேய்கள் தான்.  இந்த பேய்களை விரட்டவே இந்த வேதாளம் வந்திருக்கிறது.  அனைத்து பேய்களையும் ஒரே நேரத்தில் ஓட்ட முடியாது. ஒவ்வொரு பேயாக ஓட்டிக் கொண்டிருக்கிறேன். இந்த பேயை ஓட்டிவிட்டு அந்த பேய்க்கு வருகிறேன் பொறுத்திருங்கள் என்றார். 

jayakumar

முன்னதாக சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  அண்ணாமலை என்கின்ற வேதாளம் எங்களை விட்டு இறங்கி விட்டது. தற்போது செல்வப் பெருந்தகை பிடித்துக் கொண்டது என்று கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.