“அண்ணாமலைக்கு திராவிட இயக்கத்தின் சான்றிதழ் தேவையில்லை”

 
“அண்ணாமலைக்கு திராவிட இயக்கத்தின் சான்றிதழ் தேவையில்லை”

நேர்மைக்கு சொந்தக்காரரான அண்ணாமலைக்கு திராவிட இயக்கத்தவர்களின் சான்றிதழ் தேவையில்லை என அண்ணாமலை ஆதரவாளர் அமர்பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “அண்ணாமலை தமிழகத்துக்கு தோசை சுடவோ, இட்லி சுடவோ வரவில்லை. பாஜகவின் மேனேஜர் சீட்டை தேய்த்துக்கொண்டு போக வரவில்லை. பாஜக தலைவராக வந்துள்ளேன். நான் தலைவன் தலைவனாகதான் முடிவெடுப்பான். ஜெயலலிதா எப்படி முடிவெடுப்பாரோ அதேபோல்தான் நானும் முடிவெடுப்பான். தலைவர்கள் முடிவெடுத்தால் நான்கு பேர் வெளியேறதான் செய்வேன். கட்சி வளர்ச்சிக்கு என்ன முடிவு எடுக்க வேண்டுமோ அதனை துணிந்து எடுப்பேன்” எனக் கூறியிருந்தார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்த அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் தனது டிவிட்டர் பக்கத்தில், “ஒரு தலைவருக்கும் மேனேஜருக்கும் உள்ள வித்தியாசம். எங்கள் அன்புத் தலைவர் ஜெயலலிதாவை 1.5 கோடி தொண்டர்கள் தேர்வு செய்தனர். கருணாநிதியும் அவரது தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜக மாநில தலைவரைவிட மேனேஜர் பணி சிறந்தது” என விமர்சித்திருந்தார். 

Image

இதற்கு டிவிட்டரில் பதிலடி கொடுத்துள்ள அண்ணாமலை ஆதரவாளர் அமர்நாத் ரெட்டி, “தலைவர் என்பவர் எப்படி தேர்வு செய்யப்படுகிறார் என்பது முக்கியமல்ல; எப்படி செயல்படுகிறார் என்பதுதான் முக்கியம். நேர்மைக்குச் சொந்தக்காரராகவும்; பித்தலாட்டத்துக்கு  துணை போகாதவராகவும் இருக்கும் முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு, திராவிட இயக்கத்தவர்களின் சான்றிதழ் ஒரு நாளும் தேவையில்லை!” எனக் குறிப்பிட்டுள்ளார்.