ஞானசேகரன் திமுக நிர்வாகி தான் என ஒப்பு கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை - அண்ணாமலை

 
annamalai mkstalin annamalai mkstalin

ஞானசேகரன் ஒரு திமுக நிர்வாகி தான் என்பதை திமுகவினர் ஒப்பு கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய ஞானசேகரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் உள்ளார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என  எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றவாளி ஞானசேகரனுக்கும் திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்கள் அன்று. ஞானசேகரன் திமுக அனுதாபி தான், ஆனால் திமுக நிர்வாகி இல்லை என்கிறார்கள் இன்று.   விரைவில் "யார் அந்த சார்?" என்கிற புதிருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் போது, ஞானசேகரன் ஒரு திமுக நிர்வாகி தான் என்பதை இவர்கள் ஒப்புக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என குறிப்பிட்டுள்ளார்.