மாரியப்பன் தங்கவேலு உலக அளவில் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகள் - அண்ணாமலை

 
Annamalai Annamalai

மாரியப்பன் தங்கவேலு உலக அளவில் மேலும் பல சாதனைகள் படைத்து, நம்மை எல்லாம் பெருமைப்படுத்த வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

tn

சீனாவில் பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள்  நடைப்பெற்று வரும் நிலையில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய  வீரர்கள் சைலேஷ் குமார் தங்கப்பதக்கமும்,   மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளனர்.




இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில், சீனாவில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் சகோதரர் திரு. மாரியப்பன் தங்கவேலு அவர்கள் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார் என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு, @BJP4Tamilnadu சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சகோதரர் திரு. மாரியப்பன் தங்கவேலு அவர்கள் உலக அளவில் மேலும் பல சாதனைகள் படைத்து, நம்மை எல்லாம் பெருமைப்படுத்த வேண்டும் என்று, இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.