சீமான் பிறந்தநாள் - அண்ணாமலை வாழ்த்து

 
tnn

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான்  பிறந்தநாளையொட்டி அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Seeman

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது 57வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு அரசியல் கட்சி பிரமுகர்களும், தொண்டர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர். 
 இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் திரு.சீமான்  அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் சீமான்  அவர்கள், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் மக்கள் பணிகளை தொடர வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார்.