அத்திப்பள்ளி பட்டாசு விபத்து - அண்ணாமலை இரங்கல்

 
annamalai annamalai

அத்திப்பள்ளி பட்டாசு விபத்து சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக - கர்நாடக எல்லைப்  பகுதியான அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தினால் 14 தமிழர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு தமிழக முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அத்திப்பள்ளி பட்டாசு விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழக கர்நாடக எல்லைப்பகுதியான அத்திப்பள்ளியில், பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்திருக்கின்றனர் என்ற செய்தி அறிந்து, மிகுந்த வேதனை அடைந்தேன். அவர்கள் குடும்பத்தினருக்கு, தமிழக பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோர் அனைவரும், விரைவாக நலம் பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அவர்களுக்கான உயர்தர சிகிச்சையை உறுதி செய்யுமாறு, தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.