உண்மையான தொண்டர்களையே நடுத்தெருவில் நிறுத்தியிருக்கும் திமுக - அண்ணாமலை விமர்சனம்!

ஆட்சிக்கு வருவதற்காக, தங்கள் வாழ்க்கையையே இழந்த உண்மையான தொண்டர்களையே நடுத்தெருவில் நிறுத்தியிருக்கும் திமுகவை மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோட்டைச் சேர்ந்த 90 வயதான ஐயா திரு. மணிகண்டன் அவர்களைப் போல எண்ணற்ற அடையாளம் தெரியாத மக்களைத், தமிழ் மொழியை வைத்து ஏமாற்றி, அவர்கள் தியாகத்தால் ஆட்சிக்கு வந்த திமுகவில், இன்று அவர்கள் இடம் அறிவாலய வாசல் மட்டும்தான். தன் குடும்பத்தினருக்கும், பிற கட்சிகளிடம் இருந்து குத்தகைக்கு எடுத்தவர்களுக்கும், ஐந்து கட்சி தாவி வந்தவர்களுக்கும் மட்டுமே பதவி கொடுத்து அழகு பார்க்கும் திமுகவில், உண்மையான தொண்டர்களின் நிலை இதுதான்.
ஆட்சிக்கு வருவதற்காக, தங்கள் வாழ்க்கையையே இழந்த உண்மையான தொண்டர்களையே நடுத்தெருவில் நிறுத்தியிருக்கும் திமுக, தமிழ் மொழியைக் காப்பாற்றுகிறோம் என்று தற்போது மீண்டும் அரங்கேற்ற முயற்சிக்கும் நாடகத்தை, இனியும் பொதுமக்கள் நம்பப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.