முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தான் டப்பிங் தேவை - அண்ணாமலை பதிலடி!

 
annamalai

பாஜகவின் டப்பிங் எடப்பாடி பழனிசாமி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டிய நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

உங்களில் ஒருவன் நிகழ்ச்சி மூலம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வீடியோ மூலம் உரையாற்றினார். அதில் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கள்ளக்கூட்டணி வைத்துள்ளதாக கூறினார். டெல்லி தேர்தல் முடிவு குறுத்த பழனிசாமி அறிக்கை பாஜகவின் அறிக்கை போன்றுதான் இருந்தது எனவும்,  பழனிசாமியின் குரலே, பாஜகவுக்கான டப்பிங் குரல்தான் என கூறினார். மேலும் கள்ளக்கூட்டணி என்பதை எடப்பாடி பழனிசாமி நிரூபித்துள்ளார் எனவும் கூறினார்.  

இதனிடையே பாஜகவின் டப்பிங் எடப்பாடி பழனிசாமி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டிய நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை கூறியதாவது: முதல்வருக்குதான் டப்பிங் தேவை.  பாஜகவிற்கு அல்ல. திமுக அமைச்சரவையில் 32 பேரில் 12 பேர் அதிமுகவில் இருந்து வந்தவர்கள். அறநிலையத் துறையில் ஊழல் மலிந்து கிடக்கிறது. உதவாத துறை அறநிலையத் துறை என கூறினார்.