அண்ணன் எடப்பாடி பழனிசாமிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - அண்ணாமலை

 
eps annamalai eps annamalai

முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி எடப்பாடி பழனிசாமிக்கு தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முன்னாள் முதலமைச்சரும் அஇஅதிமுக பொதுச்செயலாளாருமான, அண்ணன் திரு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் திரு எடப்பாடி பழனிசாமி  அவர்கள், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.