நடிகர் கமல்ஹாசனுக்கு அண்ணாமலை பிறந்த நாள் வாழ்த்து

 
Annamalai

நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
  
உலக நாயகன் என அழைக்கப்படும் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 69வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். கமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி அவருக்கு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 


இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கமல்ஹாசன் அவர்கள், நீண்ட ஆயுளுடன், நல்ல உடல் நலத்துடன், தனது கலைப் பணி மற்றும் மக்கள் பணி தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.