"நீங்க எனக்கு சம்பளம் கொடுக்கிறீர்களா? கேள்வி கேட்டு என்ன மிரட்ட கூடாது"- செய்தியாளரிடம் அண்ணாமலை வாக்குவாதம்

 
அண்ணாமலை அண்ணாமலை

பாஜக நிர்வாகிகள் கூட்டத்திற்காக வந்த போது, காரை விட்டு இறங்கியதும் அண்ணாமலையிடம் மைக்கை நீட்டிய ANI செய்தி ஏஜென்சி நிருபரிடம் அண்ணாமலை வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

சென்னை ராயப்பேட்டை ஒய் எம்சிஏ மைதானத்தில் பாஜகவின் தொகுதி அமைப்பாளர்கள் இணை அமைப்பாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு   பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வரும்பொழுது   ANI செய்தியாளர் திடீரென கூட்டத்தில் நுழைந்து கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக கேள்வி எழுப்பினார் 

அப்பொழுது சட்டென கோபப்பட்ட அண்ணாமலை எனது அனுமதி இல்லாமல் ஏன் கேள்வி கேட்கிறீர்கள்? கூட்டத்திற்கு வந்திருக்கிறேன். இப்படி அனுமதி இல்லாமல் கேட்பது சரியா? என கேள்வி எழுப்பினார். மேலும் இங்கு இத்தனை ஆண்டுகளாக நான் பத்திரிகையாளர்களை சந்தித்து வருகிறேன், நீங்க எனக்கு சம்பளம் கொடுக்கிறீர்களா? கேள்வி கேட்டு என்ன மிரட்ட கூடாது என தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரிடம் செய்தியாளரும் தொடர்ந்து வாக்குவாதம் செய்ததால் அப்பகுதியில் சிறி சலசலப்பு ஏற்பட்டது. பொதுவெளியில் நிருபரை முகம் சுளிக்க வைக்கும் வகையில் ஒருமையில் பேசிய பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு கண்டங்கள் வலுத்துவருகின்றன.