வெற்று மிரட்டல்களுக்கு பயப்படப் போவதில்லை! ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை பதில்

 
Annamalai

ஊழல், கமிஷன், லஞ்சம் இல்லாத ஆட்சியை தமிழகத்தில் உருவாக்க விரும்பும் நாங்கள், இந்த வெற்று மிரட்டல்களுக்கு பயப்படப் போவதில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

DMK MP seeks Rs 100 crore from BJP president Annamalai for defaming CM |  The News Minute

சமீபத்தில் கோவில்பட்டியில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “தமிழ்நாட்டின் அரசியலை பாஜக வேறுவிதமாக கையாள்கிறது.அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என மிரட்டி பார்க்கிறார். திமுக ஆட்சி மீது கை வைத்தால், தமிழ்நாட்டில் ஒரு பாஜக தொண்டர்களும் உயிரோடு இருக்க முடியாது” எனக் கூறினார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “திமுக ஆட்சியில், தமிழக மக்கள் மற்றும் மற்ற அரசியல் கட்சித் தொண்டர்கள் தொடர்ச்சியாக அனுபவிக்கும் இன்னல்களை, பாஜகவினருக்கு கொலைமிரட்டல் விடுத்ததன் மூலம் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளார் திமுகவின் திரு ஆர்.எஸ்.பாரதி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே; ஊழல், கமிஷன், லஞ்சம் இல்லாத ஆட்சியை தமிழகத்தில் உருவாக்க விரும்பும் நாங்கள், இந்த வெற்று மிரட்டல்களுக்கு பயப்படப் போவதில்லை.” எனக் குறிப்பிட்டுளார்.