திமுக அரசை கண்டித்து நாளை பாஜக கருப்புக் கொடி போராட்டம் - அண்ணாமலை அறிவிப்பு

 
annamalai mkstalin annamalai mkstalin

தமிழக மக்களை குடிகாரர்களாக்கிய திமுக அரசை கண்டித்து நாளை (22.03.2025) காலை 10 மணிக்கு, தமிழக பாஜகவின் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடிநீரை கோட்டை விட்டார், குடிகாரர் ஆக்கிவிட்டார். தமிழகத்தில் இன்று ஊழல் இல்லாத துறைகளே இல்லை, படுகொலைகள் நடக்காத நாளே இல்லை, பாலியல் குற்றங்கள் நிகழாத நகரங்களே இல்லை. பொதுமக்களிடையே எழுந்துள்ள கோபத்தை மடைமாற்ற திமுக அரங்கேற்றும் ஒரு மெகா நாடகம் தான் தொகுதி மறுசீரமைப்பு.

குடிநீரை கோட்டை விட்டு, தமிழக மக்களை குடிகாரர்களாக்கிய திமுக அரசை கண்டித்து நாளை (22.03.2025) காலை 10 மணிக்கு, தமிழக பாஜகவின் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என அண்ணாமலை அறிவித்துள்ளார்.