மாணவர்கள் புதிய பாரதத்தை படைக்க வேண்டும்- அண்ணாமலை

 
Annamalai

என் மண் , என் தேசம் பயணத்திற்காக, செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அடுத்த  நின்னக்கரையை சேர்ந்த மறைந்த சுதந்திர போராட்ட தியாகி நடேசன் நாயக்கர் இல்லத்திற்கு வந்த, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அவரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

Image

தொடர்ந்து உறவினர்களிடம் நடேசன் நாயக்கர் வரலாறுகளை கேட்டு அறிந்து, டெல்லியில் நிறுவப்பட உள்ள பாரதமாதா சிலைக்கு மறைந்த தியாகி நடேசன் நாயக்கர் வசித்த இல்லத்திலிருந்து மண் எடுத்துச் சென்றார். இதனை அடுத்து காட்டாங்குளத்தூரில் உள்ள சிவானந்தா குருகுலம் உண்டு உறைவிட பள்ளிக்கு சென்ற அண்ணாமலை குழந்தைகளிடம் கலந்துரையாடினார்.

இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியில் பேசிய அண்ணாமலை, “சமுதாயத்தில் தற்பொழுது 'அன்பு' குறைவாக உள்ளது. இன்று இந்தியா திருநாட்டில் அனைத்து வசதிகளும் உள்ளது. சூரிய சக்தி, காற்று , பணம், மனிதர்கள் என அனைத்தும் உள்ளது, ஆனால் அன்பு மற்றும் சற்று குறைவாக உள்ளது. சக மனிதர்கள் மீது அன்பு செலுத்துதல், சக மனிதர்களிடையே வேற்றுமைப்படுத்தி, நீ பெரிய ஆளா, நான் பெரிய ஆளா, அதுபோன்று பார்க்காமல் அனைவரையும் ஒரே மாதிரியாக பார்க்க வேண்டும்.  கருப்பு,சிவப்பு ,வெள்ளை என பார்க்காமல் அனைவரையும் மனிதனாக பார்க்க வேண்டும்.

Image

1918 ஆம் ஆண்டு பாரதியார் ஒரு நாள் நிலவிற்கு செல்ல வேண்டும் என கவிதை எழுதினார். நூறாண்டுகளுக்குப் பிறகு நிலவிற்கு சந்திராயன் 3 சென்றுள்ளது  சூரியனை கண்ணால் மட்டும் பார்க்க முடியும், சூரியன் பக்கத்தில் யாரும் போக வேண்டும் என நினைக்க முடியாது . இன்றைக்கு 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில், உள்ள சூரியனுக்கு இந்தியா செயற்கைக்கோள் அனுப்புகிறது. இதுபோன்று, இந்தியா முழுவதும் ஒரு மிகப்பெரிய மாற்றங்களை கொடுக்கக்கூடிய, புதிய பாரதத்தை மாணவர்களாகிய நீங்கள் கொடுக்க வேண்டும்” என்றார்.