கூட்டணியை பற்றி கவலைப்படாமல் தேர்தல் பணியாற்றுங்கள்! கட்சியினருக்கு அண்ணாமலை அறிவுரை

 
Annamalai

2024 பாராளுமன்ற தேர்தல் பாஜகவிற்கான பலப்பரீட்சை என்பதால், கூட்டணியைப் பற்றி கவலைப்படாமல் தேர்தல் பணியாற்ற வேண்டும் என  பாஜக தொண்டர்களுக்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில்  அறிவுரை வழங்கினார்.

Annamalai

கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் பாஜக சிறப்பு மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை  கலந்து செயற்குழு உறுப்பினர்கள் மத்தியில் பேசினார். அப்போது பேசிய அவர், “தமிழக மக்கள் மீது பிரதமர் அதிகளவில் அன்பு வைத்துள்ளார், அவர் மக்களை மனதில் வைத்தே திட்டங்களை வழங்கி வருகிறார். ஜனநாயகத்தின் தலைவராக பிரதமர் இருக்கிறார், பிரதமராக 9 ஆண்டுகளைக் கடந்து, 10 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இன்னும் 5 ஆண்டு காலம் மோடி பிரதமராக இருக்க வேண்டும். தேனீக்களைப் போல சுறுசுறுப்பாக பணி செய்ய வேண்டும், தமிழகத்தில் இருந்து எத்தனை எம்.பி.களை பாராளுமன்றத்திற்கு அனுப்பபோகின்றோம் என்பதை திட்டமிட வேண்டும். இந்தியாவை அடிப்படையில் இருந்து மாற்றியுள்ளார் பிரதமர். இன்னொரு பாதையில் அழைத்து சென்றுள்ளார். 

2024 என்பது பாஜகவிற்கு பலபரீட்சை, எல்லா தீய சக்திகளும் ஒரு அணியில் திரண்டுள்ளனர், பாஜக தொண்டர்கள் வீடுவீடாக சென்று மக்களை சந்திக்க வேண்டும். இன்றிலிருந்து பாராளுமன்ற தேர்தல் நமக்கு ஆரம்பித்து விட்டது. வெற்றி தோல்வியை தாண்டி உழைப்பு போடுங்கள்,  கூட்டணியில் இருக்கிறோம், கூட்டணியில் இல்லை, தனியாக போட்டி போடுகிறோம், போட்டி போட்டும் வெற்றி பெறவில்லை போன்ற எண்ணங்களை தூக்கிப்போட்டு உழையுங்கள். 39 தொகுதியில் இருந்து 7 பேர் ஒரு தொகுதிக்காக வந்துள்ளீர்கள்,  எந்தவிதமான எதிர்பார்ப்பு இல்லாமல் உழையுங்கள், 7 மாத காலம் உழையுங்க” என செயற்குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.