"தமிழ் மொழியில் பொறியியல் படித்தால்..." - அண்ணா பல்கலை., துணைவேந்தரின் அசத்தல் பேச்சு!

 
ttn

பொறியியல் படிப்பை மாணவர்கள் தாய்மொழியான தமிழ் வழியில் கற்பதன் மூலம் சிறந்த தொழில் நிபுணர்கள் ஆகலாம் என்று அண்ணாபல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ்  தெரிவித்துள்ளார்.

anna university

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.  அப்போது பேசிய அவர், " பொறியியல் உள்ளிட்ட பல்வேறு பாடங்களை மக்கள் தங்கள் மொழிகளில் படித்தால் நன்றாக கற்க முடியும்.  அதனால் மாணவர்கள் தங்கள் தாய் மொழியில் கல்வி கற்பதை எப்போதுமே ஊக்குவிக்க வேண்டும். தாய்மொழியான தமிழ் வழியில் மாணவர்கள் கல்வி கற்பதன் மூலம் நன்றாக உள்வாங்கி படிக்க முடியும். ஜெர்மனி, ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகளில் பொறியியல் போன்ற தொழிற்துறை பாடங்கள்  தாய்மொழியில்தான் கற்பிக்கப்படுகிறது. அதனால்தான் அவர்கள் அத்துறையில் சிறந்து விளங்குகிறார்கள்.

ttn

பொறியியல் உள்ளிட்ட பல்வேறு தொழில்முறை படிப்புகளை தாய்மொழியில் கற்கும் மாணவர்கள் சிறந்த தொழில் வல்லுனர்களாக மாறுவார்கள் . தமிழகத்தை மேம்படுத்துவதற்கு தாய்மொழி கல்வி கற்பது உதவியாக இருக்கும்.  எனவே தாய்மொழி கல்வியை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும்.அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் சமீபத்தில் நடத்திய ஆய்வில் 44 சதவீத மாணவர்கள் தாய்மொழியில் பொறியியல் படிப்பதற்கு ஆதரவாக உள்ளது தெரியவந்துள்ளது. தமிழ் மற்றும் இந்தி மிகவும் விருப்பமான மொழி தேர்வாக மாணவர்கள் மத்தியில் இருக்கிறது.  மற்ற மொழிகளை நாம் கற்கலாம் . ஆனால் முதலில் தாய் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்.  தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்க வேண்டும் . அரசு பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களில் தாய் மொழியை வளர்க்க வேண்டும் என்றார்.