பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் புழல் சிறையில் அடைப்பு!

 
கைதான ஞானசேகரன் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை தொடர்பாகவும் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போலீசாரிடம் இருந்து தப்பியோடிய போது கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வந்தார். தற்போது உடல்நிலை சீரானதை தொடர்ந்து புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.