அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் சஸ்பெண்ட்

 
ஆ ஆ

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

அண்ணா பல்கலை. முன்னாள் துணை வேந்தர் வேல்ராஜ், இன்றுடன் பணி ஓய்வு பெற இருந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் 2021-24 ஆண்டுகளில் துணை வேந்தராக இருந்தவர். துணைவேந்தராக பதவி வகித்த காலத்தில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

துணை வேந்தராவதற்கு முன்பாக, அங்குள்ள எரிசக்தி ஆய்வு நிறுவனத்தில் அவர் பணியாற்றிய போது நிதி முறைகேட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்ட நிலையில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.