அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு!

 
tn

அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

anna univ

அண்ணா பல்கலைக்கழகம் தேர்வுக் கட்டணம் நேற்று 50% உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.  ஒரு தாளுக்கு ரூ.150ஆக இருந்த தேர்வுக் கட்டணம் ரூ.225ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  டிகிரி சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் ரூ1,000த்தில் இருந்து ரூ.1,500ஆக உயர்த்தப்பட்டது. ஒரு செமஸ்டருக்கு 9 தாள்கள் எழுத வேண்டி உள்ளதால் ரூ.2,050 கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இறுதியாண்டு மாணவர்கள் ப்ராஜெக்ட் செய்ய ரூ.600 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் ரூ.900ஆக உயர்ந்தது. இதனால் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

tn

இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 50% தேர்வு கட்டண உயர்வு முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக துணை வேந்தர் வேல்ராஜ் அறிவித்துள்ளார்.இந்த செமஸ்டரில் பழைய கட்டண நடைமுறையே பின்பற்றப்படும். கூடுதலாக தேர்வு கட்டணம் வசூலிக்கப்பட்ட கல்லூரிகளில் மாணவர்களுக்கு திருப்பி தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.