அண்ணா பல்கலை. பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

 
anna

மே 15ம் தேதி தொடங்கவிருந்த அண்ணா பல்கலை. பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

anna university

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கும் நாடாளுமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது.  தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற  ஜூன்4ம் தேதி எண்ணப்பட உள்ளன. தமிழகத்தின் 39 தொகுதிகளில் வாக்குப்பதிவுகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெரும்பாலும் பொறியியல் கல்லூரிகளில் வைக்கப்பட்டுள்ளன.  இதற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  இதனிடையே பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் வருகிற 15ஆம் தேதி தொடங்கி நடைபெற இருந்தன. இருப்பினும்  வாக்கு எண்ணிக்கை சமயத்தில் செமஸ்டர்  தேர்வுகளை நடத்துவது என்பது கடினமாக இருக்கும் என்பதால் தேர்வுகள் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

tn

இந்நிலையில் மே 15ம் தேதி தொடங்கவிருந்த அண்ணா பல்கலை. பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளதால் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.