"தமிழகத்தின் உயர்கல்வி வளர்ச்சிக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும்" - அமைச்சர் பொன்முடி

 
tn

தமிழகத்தின் உயர்கல்வி வளர்ச்சிக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

tn

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழா இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.  அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று உள்ளார். அத்துடன் ஆளுநர் ஆர் .என். ரவி, முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் , உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி , மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்றுள்ளனர்.

tn

பிரதமர் நரேந்திர மோடிக்கு நினைவு பரிசாக முதல்வர் மு.க. ஸ்டாலின் திருவள்ளுவர் சிலையை வழங்கி சிறப்பித்தார். இதையடுத்து பட்டமளிப்பு விழாவில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி , இந்தியாவிலேயே உயர்கல்வி பெறுபவர்களின் தமிழகம் தான் முதலிடம் . மாணவர்களை காட்டிலும் மாணவிகளை அதிக பட்டம் பெறுகின்றனர்.  பட்டம் பெறுபவர்கள் மேலும் திறன் பெற நான் முதல்வன்  திட்டம் அமல்படுத்தப்படுகிறது. பட்டம் பெறுபவர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும்.  அரசுப்பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் அறிவித்தார்.  உயர்கல்வியில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவே இத்திட்டம். பெண்களின் உயர்கல்வியை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.  பட்டம் பெறுபவர்கள் ஒவ்வொருவரும் தொழில்  முனைவர்களாக மாற வேண்டும்.  மாணவர்கள் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அவர் நிச்சயம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவார் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன் என்றார்.